Home Featured நாடு தன் தந்தையின் மரபுகளை நஜிப் பின்பற்ற வேண்டும்: துன் மகாதீர்

தன் தந்தையின் மரபுகளை நஜிப் பின்பற்ற வேண்டும்: துன் மகாதீர்

685
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிரதமர் நஜிப் துன் ரசாக் தமது தந்தையின் மரபுகளை பின்பற்றுவார் என தாம் நம்புவதாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார். நாட்டின் இரண்டாவது பிரதமராக பதவி வகித்த துன் ரசாக் போலவே நடப்பு பிரதமர் நஜிப்பும் நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தமது பங்களிப்பை செய்வார் என்பதே தனது எதிர்பார்ப்பாக இருந்தது என மகாதீர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

mahathir-mohamadபிரதமர் நஜிப் அரசியலில் கால்பதித்து 40 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்துச் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, “பிரதமர் நஜிப் மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். ஏனெனில் பல்வேறு நல்ல காரியங்களைச் செய்த முன்னாள் பிரதமரின் மகன் அவர்” என்றார் மகாதீர்.

“ஆனால் நஜிப்பின் செயல்பாடு தமது தந்தையின் செயல்பாடுகளில் இருந்து வேறுபட்டுள்ளது. அவர் தொடர்பான எனது குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை நிரூபிக்க திருக்குரான் மீது சத்தியம் செய்ய தயாராக உள்ளேன். நான் சொன்னவை அனைத்தும் அபத்தமானவை, அல்லது உண்மையற்றவை எனக் கருதினால் என்னை சத்தியம் செய்யச் சொல்லுங்கள். அதற்கு நான் தயாராக உள்ளேன். மற்றவர்களை சத்தியம் செய்யச் சொல்லி நான் கேட்கும்போது அதற்கு நானும் தயாராக இருக்க வேண்டும்” என்றார் மகாதீர்.

#TamilSchoolmychoice

Najib-in his office-father's memories

தனது தந்தையின் பழைய நாட்குறிப்பைப் படித்து அவரது சிந்தனைகளில் மூழ்கியதாக பிரதமர் நஜிப் அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டபோது வெளியிட்ட படம்