Home Featured உலகம் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் மரியா ஷரபோவா தோல்வி!

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் மரியா ஷரபோவா தோல்வி!

677
0
SHARE
Ad

Maria Sharapovaலாஸ் ஏஞ்சல்ஸ் – கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியில் பங்கு பெற்றபோது, நடைபெற்ற ஊக்கமருந்து பரிசோதனையில் பிரபல ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தோல்வியடைந்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை ஷரபோவா இதனை அறிவித்தார்.

காயங்கள் காரணமாக, 28 வயதான ஷரபோவா குறைந்த அளவிலான போட்டிகளிலேயே அண்மையக் காலமாக விளையாடி வருகின்றார்.

#TamilSchoolmychoice

இதய நோய் மற்றும் இரத்த சுழற்சி காரணங்களுக்காக உட்கொள்ளப்படும் மெல்டோனியம் (meldonium) என்ற தடை செய்யப்பட்ட மருந்து அவரது உடலில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தான் உட்கொண்டு வருவதாகவும், கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகள் பட்டியலில் மொல்டோனியமும் சேர்க்கப்பட்டிருந்தது தனக்கு தெரியாது என்றும் ஷரபோவா மேலும் விளக்கமளித்துள்ளார்.

“பரிசோதனையில் நான் தோல்வியடைந்தேன். அதற்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கின்றேன்” என்றும் ஷரபோவா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா பொது டென்னிஸ் போட்டியில் ஷரபோவா கால் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரினா வில்லயம்சிடம் தோல்வியடைந்தார்.

maria_sharapova-modellingமரியா ஷரபோவாவின் கவர்ச்சி விளம்பரங்களில் ஒன்று…

ரஷியாவில் பிறந்த ஷரபோவா, கிராண்ட் ஸ்லாம் எனப்படும் டென்னிஸ் போட்டிகளில் ஐந்து முறை வெற்றி வாகை சூடியிருக்கின்றார். விளையாட்டுத் துறையில் மிக அதிகமான வருமானத்தை ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாகத் திகழ்பவர் ஷரபோவா.

கவர்ச்சியான தோற்றம் கொண்ட ஷரபோவா, விளையாட்டுத் துறையில் ஈட்டிய வருமானத்தை விட, அந்த புகழைக் கொண்டும், தனது அழகைக் கொண்டும், விளம்பர உலகில் பன்மடங்கு அதிகமாக வருமானம் ஈட்டியவராவார்.