சென்னை – நாளை சூர்யாவின் 24 படம் உலகம் முழுவது 1200 திரையரங்குகளில் வெளியாகிறது. ஒவ்வொரு படத்திலும் தனிச்சிறப்பாக ஏதேனும் செய்து ரசிகர்கள் நெஞ்சில் நிலைத்திருக்கவே விருப்பம் என்று நடிகர் சூர்யா தெரிவித்தார்.
’24’ படத்தை விளம்பரப்படுத்த பம்பரமாக சுழன்று வருகிறார் நடிகர் சூர்யா. நாயகன், தயாரிப்பு என பல விஷயங்களை தன் தோளில் சுமந்துள்ளார் கூர்யா.
’24’ போன்ற முழுக்க முழுக்க கதைக்களத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படங்கள் தமிழில் 3 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வருவதாக நான் உணர்கிறேன். ஏனெனில் பெரிய பட்ஜெட் படங்களை ஒப்புக்கொள்ளும் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் வெறும் கதையை மட்டுமே நம்பி முதலீடு செய்ய முன்வருவதில்லை.
ஆனால், பாலிவுட் திரையுலகம் அப்படி அல்ல. அந்த வகையில் இந்தி நடிகர்கள் கொடுத்து வைத்தவர்கள். அங்கு ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற இயக்குநர்கள் பெரிய பட்ஜெட்டில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் படங்களை உருவாக்கக்கூடிய சுதந்திரம் இருக்கிறது.
இங்கு தமிழிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வருகின்றன. ஆனால், அவை எல்லாம் பெரும்பாலும் சாதாரன பட்ஜெட் படங்களாகவே இருக்கின்றன.
’24’ திரைப்படம் பெரிய பட்ஜெட் படம் என்ற அடையாளத்தை மட்டுமே பெறாமல் ரசிகர்களுக்கு ஒரு பிரத்யேக அனுபவத்தை அளிக்கும் படமாகவும் இருக்கம். ’24’ எங்கள் அனைவரும் மிகவும் நெருக்கமான, முக்கியமான திரைப்படம் என சூர்யா தெரிவித்துள்ளார்.