Home Video வேட்டையன் ரஜினி – கங்குவா சூர்யா மோதல்! ஒரே நாளில் வெளியீடு!

வேட்டையன் ரஜினி – கங்குவா சூர்யா மோதல்! ஒரே நாளில் வெளியீடு!

280
0
SHARE
Ad

சென்னை: வயதாகி விட்டது – படங்கள் ஓடவில்லை – இனி அவர் சூப்பர் ஸ்டார் இல்லை – என்றெல்லாம் விமர்சிக்கப்பட்ட ரஜினிகாந்த் அதிரடியாக ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் வசூல் சாதனை புரிந்தார். இன்றுவரையில் தமிழ் நாட்டில் அதிக வசூல் செய்த படங்களில் முதன்மை வகிப்பது ஜெயிலர்தான்.

அடுத்து ரஜினி நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் மலரும் படம் ‘வேட்டையன்’. சந்திரமுகி படத்தில் மன்னனாக ரஜினி நடித்த கதாபாத்திரத்தின் பிரபலமான பெயர். ஞானவேல் ஏற்கனவே ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தவர்.

ரஜினி – ஞானவேல் இணைப்பில் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கும் வேட்டையன் எதிர்வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே நாளில் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ வெளியாகவிருக்கிறது. பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கங்குவா.

#TamilSchoolmychoice

கங்குவா சூர்யா – வேட்டையன் ரஜினி ஒரே நாளில் திரையரங்குகளில் மோதுவார்களா? அல்லது யாராவது ஒருவர் பின்வாங்குவாரா என்பதைக் காண திரையுலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.