Home Video கங்குவா முன்னோட்டம் : மிரட்சி ஒருபுறம்! குறைகூறல்கள் இன்னொருபுறம்!

கங்குவா முன்னோட்டம் : மிரட்சி ஒருபுறம்! குறைகூறல்கள் இன்னொருபுறம்!

282
0
SHARE
Ad

சென்னை: 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் பான்-இந்தியா என்று கூறப்படும் அனைத்திந்திய திரைப்படமாக உருவாகி வெளியாகவிருக்கிறது சூர்யா நடிக்கும் ‘கங்குவா’. பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி திரையீட்டுக்குத் தயாராக இருக்கிறது.

எதிர்வரும் அக்டோபர் 10-ஆம் தேதி கங்குவா வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டு கலவையான விமர்சனங்களைச் சந்தித்திருக்கிறது.

படத்தில் பேசப்படும் வசனங்கள் பழந்தமிழர் மொழியிலோ, மலைவாழ் பூர்வ குடி மக்கள் பேசுவதைப் போன்றோ – இருப்பதால் புரியவில்லை என்ற குறைகூறல்கள் எழுந்திருக்கின்றன. அதே நேரத்தில் சூர்யாவின் நடிப்பு, படத்தின் பிரம்மாண்டம் ஆகியவையும் இரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தங்கலான் திரைப்படம் படுமோசமான தோல்விப் படம் என்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், கங்குவா படம் வெற்றி பெறுமா என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது.

கங்குவா திரைப்படத்தில் பிரபல இந்தி நடிகர் போபி டியோல் வில்லனாக நடித்திருக்கிறார். மூத்த இந்தி நடிகர் தர்மேந்திராவின் மகனான போபி டியோல் அண்மையில் வெளிவந்த ‘அனிமல்’ என்ற இந்தி-தமிழ்ப் படத்தில் ஊமை வில்லனாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

கங்குவா திரைப்படத்தின் முன்னோட்டத்தை யூடியூப் இணையத் தளத்தில் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: