Home Video தங்கலான்: அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! 12 மில்லியனைக் கடந்த முன்னோட்டம்!

தங்கலான்: அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! 12 மில்லியனைக் கடந்த முன்னோட்டம்!

303
0
SHARE
Ad

சென்னை : பா.ரஞ்சித் படங்கள் என்றாலே இரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரிப்பது வழக்கமாகிவிட்டது. வெறும் பொழுதுபோக்கு படம் மட்டும் என்றில்லாமல், ஏதாவது ஒரு சமூக விழிப்புணர்வு செய்தியையும் தனது படத்தில் கலந்து தருவார் ரஞ்சித்.

அந்த வகையில் அவரின் அடுத்த படைப்பான ‘தங்கலான்’ – விக்ரமின் வெறித்தனமான நடிப்பும் சேர்ந்து கொள்ள – எதிர்பார்ப்புகளை இரசிகர்களிடையே மேலும் எகிற வைத்துள்ளது.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது ‘தங்கலான்’. அந்தப் படத்தின் முன்னோட்டம் 12 மில்லியன் பார்வையாளர்களை இதுவரையில் கடந்து விட்டது.

#TamilSchoolmychoice

அந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: