Home கலை உலகம் ஆஸ்ட்ரோ: பிரபல நடனப் போட்டி ‘ஆட்டம்’ மீண்டும் மலர்கிறது! மெய்நிகர் தேர்வுகளில் பங்கேற்கலாம்!

ஆஸ்ட்ரோ: பிரபல நடனப் போட்டி ‘ஆட்டம்’ மீண்டும் மலர்கிறது! மெய்நிகர் தேர்வுகளில் பங்கேற்கலாம்!

223
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோவின் பிரபல நடனப் போட்டி ‘ஆட்டம்’ மீண்டும் மலரவிருப்பதால் ஆர்வமுள்ள உள்ளூர் நடனக் கலைஞர்கள் இப்போது தொடங்கி மெய்நிகர் தேர்வுகளில் (ஆடிஷனில்) பங்கேற்கலாம்.

‘ஆட்டம்’ நிகழ்ச்சி பற்றிய விவரங்கள்:

• 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்டம் எனும் தனது பிரபல நடனப் போட்டியை மீண்டும் ஆஸ்ட்ரோ கொண்டுவருகிறது. இதில் 50,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறப் பல்வேறு வகையானத் தமிழ் திரைப்படப் பாடல்கள் மற்றும் இசைக்கு நடனக் கலைஞர்கள் குழு வடிவில் நடனமாடிப் போட்டியிடுவர். பிரபலமான நடனக் கலைஞர்களாக வேண்டும் என்ற தங்கள் கனவுகளை நனவாக்கத் தகுந்த தளத்தைத் தேடும் அனைத்து ஆர்வமுள்ள மலேசிய நடனக் கலைஞர்களையும் இப்போது முதல் ஆகஸ்டு 21 வரை மெய்நிகர் ஆடிஷனில் பங்கேற்க ஆஸ்ட்ரோ அழைக்கிறது.

#TamilSchoolmychoice

• மெய்நிகர் ஆடிஷனில் பங்கேற்க, போட்டியாளர்கள் பின்வருபவற்றை மேற்கொள்ள வேண்டும்:

o 6 உறுப்பினர்களைக் கொண்டக் குழு நடனத்தைக் காணொலியாக பதிவுச் செய்ய வேண்டும்.

o பின்னர், ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பப் படிவத்தில் 6 உறுப்பினர்களின் முழு விவரங்களையும் நிரப்ப வேண்டும்.

o விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்ய, அவர்கள் விண்ணப்பப் படிவத்துடன் பதிவுச் செய்யப்பட்ட அசல் நடனக் காணொலியைச் சமர்ப்பிக்க வேண்டும்.

• தேர்ந்தெடுக்கப்பட்ட 50 குழுக்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்க அழைக்கப்படுவர்.

• ஆட்டம் போட்டியின் வெற்றியாளர்கள் பின்வரும் ரொக்கப் பரிசுகளை வீட்டிற்குத் தட்டிச் செல்லும் வாய்ப்பைப் பெறுவர்:

o முதலாம் பரிசு: 50,000.00 ரிங்கிட்
o இரண்டாம் பரிசு: 25,000.00 ரிங்கிட்
o முன்றாம் & நான்காம் பரிசுகள்: ஒவ்வொரு குழுக்கும் தலா 5,000.00 ரிங்கிட்
o ஐந்தாம் & ஆறாம் பரிசுகள்: ஒவ்வொரு குழுக்கும் தலா 2,000.00 ரிங்கிட்

• மேல் விபரங்களுக்கு ஆஸ்ட்ரோ உலகம் எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.