Home Featured நாடு மாயமான பெல்ஜியம் நாட்டவரின் சடலம் கோல குபு பாரு அருகே கண்டுபிடிப்பு!

மாயமான பெல்ஜியம் நாட்டவரின் சடலம் கோல குபு பாரு அருகே கண்டுபிடிப்பு!

628
0
SHARE
Ad

thomas-cools-whatsapp-image-20160918-1909கோல குபு பாரு – கோல குபு பாரு அருகே வார இறுதியில் நடைபெற்ற 9-வது அனைத்துலக ஹேஷ் சேலஞ் என்ற ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த தாமஸ் கூல்ஸ் (வயது 34) அங்கிருந்த மலை ஒன்றின் அருகே இறந்து நிலையில் காணப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை காலை 7 மணியளவில் தொடங்கிய அப்போட்டி, அன்று மாலை 7.30 மணியளவில் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் திரும்பிவிட்ட நிலையில், தாமஸ் கூல்ஸ் மட்டும் திரும்பி வரவில்லை என்று கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.48 மணியளவில், ஏற்பாட்டுக் குழுவினர் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று இரவு 7.30 மணிவரை தேடுதல் பணிகளை மேற்கொண்ட தீயணைப்புப் படையினர், அதன் பின்னர் இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் தேடுதல் பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கம்போங் ஓராங் அஸ்லி கெர்லிங் அருகே, தாமஸ் இறந்து கிடந்ததை தீயணைப்புப் படையினர் கண்டுள்ளனர்.

அவரது இறப்பிற்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில், தற்போது கோல குபு பாரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள அவரது சடலம் அங்கு பிரேதப் பரிசோதனை செய்யப்படவுள்ளது.