Home நாடு புக்கிட் பிந்தாங் கேளிக்கை விடுதியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்!

புக்கிட் பிந்தாங் கேளிக்கை விடுதியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்!

1694
0
SHARE
Ad

கோலாலம்பூர் – புக்கிட் பிந்தாங்கில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.50 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில் விடுதியின் வாயிலில் நின்று கொண்டிருந்த பணியாளர்கள் நான்கு பேரில் ஒருவர் காயமடைந்தார்.

விடுதியின் கார் நிறுத்துமிடத்தில் இருந்து விடுதியை நோக்கி அந்நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கலாம் என காவல்துறை கூறுகின்றது.

#TamilSchoolmychoice

இது குறித்து மாநகர குற்றப்புலனாய்வுத் துறை தலைமை உதவி ஆணையர் ருஸ்டி முகமட் இசா கூறுகையில், “விடுதியின் கார் நிறுத்துமிடத்தில் 25 தோட்டா மூடிகளை கைப்பற்றியிருக்கிறோம். விடுதியின் வாயிலில் இருந்து 30 மீட்டர் இடைவெளியில் அவை கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

“இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது” என்று ருஸ்டி முகமட் தெரிவித்திருக்கிறார்.