Home தேர்தல்-14 தேர்தல் 14: சிலாங்கூரில் பாதுகாப்புப் பணியில் 15,000 போலீஸ்!

தேர்தல் 14: சிலாங்கூரில் பாதுகாப்புப் பணியில் 15,000 போலீஸ்!

1367
0
SHARE
Ad
கோப்புப்படம்

கோலாலம்பூர் – நாளை மே 9 புதன்கிழமை நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு சிலாங்கூர் மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் 15,000 காவல்துறையினர் ஈடுபடவிருக்கின்றனர்.

இது குறித்து தேர்தல் 14-க்கான காவல்துறை செய்தித் தொடர்பாளர் துணை ஆணையர் நோர்டின் மனான் கூறுகையில், 13,695 காவல்துறையினர் சிலாங்கூரைச் சுற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், 1,124 காவல்துறையினர் மற்ற மாநிலங்களில் இருந்து இங்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தேர்தலின் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதனை எதிர்க்கொள்ளவும் அவர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் நோர்டின் மனான் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice