Home தேர்தல்-14 மலேசியர்களே! தேர்தலில் அல்தான்துயாவை நினைவில் கொள்ளுங்கள்: அல்தான்துயா தந்தை

மலேசியர்களே! தேர்தலில் அல்தான்துயாவை நினைவில் கொள்ளுங்கள்: அல்தான்துயா தந்தை

1310
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாளை புதன்கிழமை, 14-வது பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் தந்தை டாக்டர் செதெவ் ஷாரிபு, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கும், மலேசியர்களுக்கு உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “மலேசியர்களே தேர்தலில் அல்தான்துயாவை நினைவில் கொள்ளுங்கள். ஒருவேளை தவறானவர்களைத் தேர்ந்தெடுத்தால், நீங்களும் இழப்பைச் சந்திக்க நேரிடும். இந்தக் கொலையைப் போல் (அல்தான்துயா மரணம்)” என்று டாக்டர் செதெவ் ஷாரிபு தெரிவித்திருக்கிறார்.

இந்த வாசகம் அடங்கிய கடிதம் ஒன்றில் தனது கையெழுத்து மற்றும் மலேசியக் கொடியை ஏந்திய புகைப்படத்துடன் டாக்டர் செதெவ் ஷாரிபு அதனை வெளியிட்டிருக்கிறார்.