Home தேர்தல்-14 வண்ணத்தை மாற்றிய ஏர் ஆசியா: தெரிவது பாரிசானா? பிகேஆரா?

வண்ணத்தை மாற்றிய ஏர் ஆசியா: தெரிவது பாரிசானா? பிகேஆரா?

1210
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேசிய முன்னணிக்கு ஆதரவாக ஏர் ஆசியா நிறுவனம் தனது விமானம் ஒன்றின் வண்ணத்தை நீல நிறத்திற்கு மாற்றியதோடு, அதில் தேசிய முன்னணியின் கருப்பொருளான ‘என்னுடைய நாட்டை சிறப்பாக மாற்றுக’ என எழுதியிருந்தது.

அவ்விமானத்தில் நேற்று திங்கட்கிழமை தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் ஏர் ஆசியா தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் ஆகியோர் சபா மாநிலம் கோத்தா கினபாலுவில் இருந்து கோலாலம்பூர் வந்தடைந்தனர்.

இந்நிலையில், அவ்விமானம் தேசிய முன்னணிக்கு ஆதரவாக விளம்பரப்படுத்தியிருந்தாலும் கூட, அதில் உள்ள நீலம், சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தைப் பார்த்த பிகேஆர் ஆதரவாளர்கள், அவ்விமானத்தின் வண்ணங்கள் தங்களது கட்சிக் கொடியைப் பிரதிபலிப்பதாக நட்பு ஊடகங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

நாளை மே 9-ம் தேதி, புதன்கிழமை, நாட்டின் 14-வது பொதுத்தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.