Home தேர்தல்-14 14-வது பொதுத்தேர்தலில் ஷாபி அப்டால் போட்டியிடலாம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

14-வது பொதுத்தேர்தலில் ஷாபி அப்டால் போட்டியிடலாம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

1016
0
SHARE
Ad

கோத்தா கினபாலு – 14-வது பொதுத்தேர்தலில், பார்ட்டி வாரிசான் சபா தலைவர் டத்தோஸ்ரீ முகமது ஷாபி அப்டாலின் வேட்புமனுவை நிராகரிக்கும்படி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை இன்று செவ்வாய்க்கிழமை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் அம்மனுவை நிராகரித்தது.

செம்பூர்ணா அம்னோ குழு உறுப்பினர் டத்தோ முகமது ஐனல் ஃபாத்தா, ஷாபி அப்டாலின் வேட்புமனுவை நிராகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடும் படி, கடந்த ஏப்ரல் 17-ம் தேதி, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

#TamilSchoolmychoice

இந்நிலையில், அம்மனுவை இன்று விசாரணை செய்த நீதிபதி அசாஹரி கமல் ரம்லி, அம்மனு அற்பமானது மற்றும் ஆத்திரமூட்டக்கூடியது என்று கூறி அதனை நிராகரித்தார்.

நாளை புதன்கிழமை நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், சபா மாநிலம் செம்பூர்ணா நாடாளுமன்றத் தொகுதியிலும், சென்னலாங் சட்டமன்றத் தொகுதியிலும் வாரிசான் கட்சி சார்பில் ஷாபி அப்டால் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.