Home தேர்தல்-14 தேமு-விற்காக நீலத்திற்கு மாறிய ஏர் ஆசியா விமானம்!

தேமு-விற்காக நீலத்திற்கு மாறிய ஏர் ஆசியா விமானம்!

1261
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சபாவில் பிரச்சாரத்திற்காகச் சென்றிருந்த தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், கோலாலம்பூருக்கு நேற்று திங்கட்கிழமை இரவு ஏர் ஆசியாவின் சிறப்பு விமானத்தில் வந்தடைந்தார்.

அவ்விமானம் தேசிய முன்னணியின் நீல வர்ணம் பூசப்பட்டு, தராசு சின்னம் பொறிக்கப்பட்டு, தேசிய முன்னணியின் கருப்பொருளான ‘என்னுடைய நாட்டை சிறப்பாக மாற்றுக’ என எழுதப்பட்டிருந்தது.

கோத்தா கினபாலுவில் இருந்து புறப்பட்ட அவ்விமானத்தில் நஜிப் துன் ரசாக்குடன், ஏர் ஆசியா தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டசும் உடன் வந்திருந்தார்.

#TamilSchoolmychoice

மேலும் நஜிப்புடன், சபா மாநில துணை முதல்வர்கள் ஜோசப் பைரின் கிடிகான் மற்றும் யாஹ்யா ஹுசைன், மாநிலச் செயலாளர் சுகார்டி வாகிமான் மற்றும் பல மூத்த அரசாங்க அதிகாரிகளும் அவ்விமானத்தில் பயணித்தனர்.

விமானத்தில் இருந்த பணிப்பெண்கள் வழக்கமாகத் தங்களது சிவப்பு நிற உடையைத் தவிர்த்து நீல நிறத்திற்கு மாறியிருந்தனர்.

மேலும், டோனி பெர்னாண்டஸ் நேற்று வெளியிட்ட காணொளி ஒன்றில் நஜிப் தலைமையிலான அரசு, மக்களுக்கே முதலிடம் தருவதாகக் குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து டோனிக்கு எதிராகப் பலரும் நட்பு ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.