Home தேர்தல்-14 பெந்தோங்: லியோவ் தியோங் லாய்க்கு ஆதரவாகப் பேசிய தெங்கு மக்கோத்தா

பெந்தோங்: லியோவ் தியோங் லாய்க்கு ஆதரவாகப் பேசிய தெங்கு மக்கோத்தா

1187
0
SHARE
Ad
பகாங் தெங்கு மக்கோத்தா – தெங்கு அப்துல்லா

பெந்தோங் – நேற்று திங்கட்கிழமை பெந்தோங் நகருக்கு வருகை தந்த பகாங் சுல்தானின் புதல்வரும், தெங்கு மக்கோத்தாவுமான தெங்கு அப்துல்லா சுல்தான் அகமட் ஷா, பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் பெல்டா நிலக் குடியேற்ற வாசிகளுடன் உரையாடினார்.

தனது உரையில் தேசிய முன்னணி பகாங் மாநிலத்திற்கு வழங்கி வந்துள்ள சேவைகளைப் பாராட்டிய தெங்கு அப்துல்லா, உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் பகாங் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பெந்தோங் – 2018 வாக்காளர் விவரங்கள்

இந்த நிகழ்ச்சியில் பகாங் மந்திரி பெசார் அட்னானும், பெந்தோங் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடும் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய்யும் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

பெந்தோங் நகரில் லியோவ் தியோங் லாய் நாடாளுமன்ற உறுப்பினராக வழங்கி வரும் சேவைகளுக்கும் தெங்கு அப்துல்லா பாராட்டும் திருப்தியும் தெரிவித்தார்.

பெந்தோங் தொகுதியில் லியோவ் தியோங் லாய் பதாகைகள்

எனினும், அடுத்து பகாங் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப் போவது எந்த கட்சியாக இருந்தாலும், அந்தக் கட்சியுடன் இணைந்து பகாங் மாநில மேம்பாடுகளுக்காக ஒத்துழைப்பு வழங்கப் போவதாகவும் துங்கு அப்துல்லா உறுதியளித்தார்.

பெந்தோங் – பக்காத்தான் வேட்பாளர்களின் பதாகை

பெந்தோங் நாடாளுமன்றத்தில் மும்முனைப் போட்டியை மசீச தேசியத் தலைவர் லியோவ் எதிர்நோக்கியுள்ளார். பக்காத்தான் சார்பில் ஜசெகவின் வோங் தாக் போட்டியிடுகிறார்.

பாஸ் கட்சியின் சார்பில் பாஸ் ஆதரவாளர்கள் மன்றத்தின் பாலசுப்பிரமணியம் போட்டியிடுகிறார்.

NEGERI PAHANG
Parlimen P.089 – BENTONG
NAMA PADA KERTAS UNDI PARTI
DATO’ SRI LIOW TIONG LAI BN
BALASUBRAMANIAM A/L NACHIAPPAN PAS
WONG TACK PKR