Home நாடு பெந்தோங் தொகுதியில் மசீச முன்னாள் தலைவர் லியோவ் தியோங் லாய் மீண்டும் போட்டி

பெந்தோங் தொகுதியில் மசீச முன்னாள் தலைவர் லியோவ் தியோங் லாய் மீண்டும் போட்டி

540
0
SHARE
Ad
வோங் தாக் -நடப்பு பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் – லியோவ் தியோங் லாய்)

பெந்தோங் : பகாங் மாநிலத்திலுள்ள பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியில் மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) தலைவர் டான்ஸ்ரீ லியோவ் தியோங் லாய், போட்டியிட தனது கட்சியின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்.

மசீச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங், 15வது பொதுத் தேர்தலில் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறும் நோக்கத்தோடு லியோவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றார்.

#TamilSchoolmychoice

14-வது பொதுத் தேர்தலில் லியோவ் பெந்தோங் தொகுதியில் தோல்வியடைந்தார். கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளம், கடந்த ஆண்டு அக்டோபரில் கம்போங் பாரு காராக்கில் நடைபெற்ற தீ விபத்து ஆகியவற்றின் போது லியோவ் பெந்தோங் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ததாக வீ கூறினார்.

“பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அவர் முன்னணியில் இருந்தார். கோவிட்-19 தொற்றுநோய் தாக்கியபோது, ​​மக்களுக்கு உதவுவதற்காக நிதி மற்றும் உதவிகளை ஒருங்கிணைப்பதில் லியோவ் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார்,” என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், அவர் நான்கு முறை எம்.பி.யாக இருந்தபோது அவர் அளித்த பங்களிப்புகளை கருத்தில் கொண்டு, பெந்தோங்கில் லியோ மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளூர் வாக்காளர்கள் வலுவான அழைப்பு விடுத்ததாகவும் வீ கா சியோங் குறிப்பிட்டார்.

லியோவ் 1999 முதல் 2018 வரை பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.  அமைச்சராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.