Home உலகம் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகினார்

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகினார்

745
0
SHARE
Ad

இலண்டன் : பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் பதவியேற்ற 45 நாட்களுக்குள்ளாக பதவி விலகியுள்ளார். இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசியலில் மீண்டும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. லிஸ் டிரஸ்சிடம் தோல்வியடைந்த இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனாக் அடுத்த பிரிட்டிஷ் பிரதமராகலாம் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் ஏற்பட்டிருக்கிறது.

பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் லிஸ் டிரஸ்ட் நடப்பு நிதி அமைச்சர் குவாசி குவார்தெங்கை அந்தப் பதவியிலிருந்து நீக்கினார். அவருக்குப் பதிலாக புதிய நிதியமைச்சராக ஜெரமி ஹண்ட் என்பவரை நியமித்தார். ஜெரமி ஹண்ட், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு லிஸ் டிரஸ்சுடன் போட்டியிட்டவர்களில் ஒருவராவார்.

பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ள ஏதுவாக இந்த மாற்றத்தை லிஸ் டிரஸ் செய்தார். எனினும் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டம் கடுமையானக் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்ததைத் தொடர்ந்து லிஸ் டிரஸ் பதவி விலகியுள்ளார்.

#TamilSchoolmychoice

இனி ஆளும் கன்சர்வேடிவ் கட்சி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும். அந்தப் புதிய தலைவரே அடுத்த பிரதமராகவும் பெயர் குறிப்பிடப்படுவார். போரிஸ் ஜோன்சன் மீண்டும் அந்தப் பதவிக்குப் போட்டியிடலாம் என்ற ஆரூடமும் வெளியிடப்பட்டிருக்கிறது.