Home நாடு 15-வது பொதுத் தேர்தல் : நவம்பர் 19 வாக்களிப்பு – அனைத்துக் கட்சிகளும் திருப்தி

15-வது பொதுத் தேர்தல் : நவம்பர் 19 வாக்களிப்பு – அனைத்துக் கட்சிகளும் திருப்தி

392
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : 15-வது பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் என மலேசியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறும்.

அதைத் தொடர்ந்து நவம்பர் 15-ஆம் தேதி முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெறும். இந்த அறிவிப்பிற்கு பொதுவாக எந்தக் கட்சியும் இதுவரை அதிருப்தியைத் தெரிவிக்கவில்லை.

போதுமான கால அவகாசம் பிரச்சாரத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் கட்சிகள் மன நிறைவடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.