Home நாடு பெந்தோங்: லியோவ் தியோங் லாய்க்கு எதிராக ஜசெகவின் வோங் தாக்!

பெந்தோங்: லியோவ் தியோங் லாய்க்கு எதிராக ஜசெகவின் வோங் தாக்!

1154
0
SHARE
Ad
வோங் தாக் – லியோவ் தியோங் லாய்

பெந்தோங் – பகாங் மாநிலத்திலுள்ள நாடாளுமன்றத் தொகுதியான பெந்தோங்கில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், மசீச தேசியத் தலைவருமான லியோவ் தியோங் லாய்யை எதிர்த்து ஜசெகவின் வோங் தாக் மீண்டும் நிறுத்தப்படுகிறார்.

நேற்று பெந்தோங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜசெகவின் தலைவர் டான் கோக் வாய் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பெந்தோங் நாடாளுமன்றம் – 2013 தேர்தல் முடிவுகள்

கடந்த 2013 பொதுத் தேர்தலில் லியோவ்வை எதிர்த்துப் போட்டியிட்ட வோங் தாக் 379 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அவர் மீண்டும் போட்டியிடுவதாக கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

பகாங் மாநிலத்தில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை எதிர்த்துப் போராடி வந்த சமூகப் போராளியாக வோங் தாக் பார்க்கப்படுகிறார். “ஹிம்புனான் ஹிஜாவ்” என்ற சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராக வோங் தாக் செயல்பட்டு வருகின்றார்.

மிகுந்த குறைந்த வாக்குகளில் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வென்ற தொகுதி என்பதோடு, மசீச தேசியத் தலைவரின் தொகுதியும் என்பதால் இந்த முறை அனைவராலும் கவனிக்கப்படும் தொகுதியாக பெந்தோங் மாறியிருக்கிறது.

2013 புள்ளி விவரங்களின்படி 45 விழுக்காடு மலாய் வாக்காளர்களும், 44 விழுக்காடு சீன வாக்காளர்களும், 9 விழுக்காடு இந்திய வாக்காளர்களும் பெந்தோங்கில் இருக்கின்றனர்.