Home நாடு ரவுப் நாடாளுமன்றம்: ஜசெக சார்பில் மலாய் வேட்பாளர்

ரவுப் நாடாளுமன்றம்: ஜசெக சார்பில் மலாய் வேட்பாளர்

790
0
SHARE
Ad
தெங்கு சுல்புரி – ரவுப் ஜசெக வேட்பாளர்

பெந்தோங் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனது கட்சியின் சார்பில் பல மலாய் வேட்பாளர்களை நிறுத்துவோம் என அறிவித்துள்ள ஜசெக, அதில் முதல் கட்ட நடவடிக்கையாக பகாங் மாநிலத்தின் ரவுப் நாடாளுமன்றத் தொகுதியில் தெங்கு சுல்புரி ஷா ராஜா புஜி என்பவரை நிறுத்துகிறது.

இந்தத் தொகுதியில் மசீசவின் மகளிர் பிரிவைச் சேர்ந்தவரான சியூ மெய் பான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சியூ மெய் பான் முன்னாள் செனட்டரும், மகளிர், குடும்பநலத் துறை முன்னாள் துணையமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது மசீசவின் உதவித் தலைவராகவும் இருக்கிறார்.

நேற்று பெந்தோங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜசெகவின் தலைவர் டான் கோக் வாய் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த 2013 பொதுத் தேர்தலில் ரவுப் தொகுதியில் ஜசெகவே வென்றது. ஜசெக சார்பில் போட்டியிட்ட மலாய் வேட்பாளரான முகமட் அரிப் சாப்ரி அப்துல் அசிஸ் 2,814 வாக்குகள் பெரும்பான்மையில் மசீச – தேசிய முன்னணி வேட்பாளரான ஹோ காய் மன் என்பவரைத் தோற்கடித்தார்.