Home நாடு சபாய் சட்டமன்றம்: ஜசெக சார்பில் மீண்டும் காமாட்சி துரைராஜூ

சபாய் சட்டமன்றம்: ஜசெக சார்பில் மீண்டும் காமாட்சி துரைராஜூ

1063
0
SHARE
Ad
காமாட்சி துரைராஜூ – சபாய் சட்டமன்ற ஜசெக வேட்பாளர்

பெந்தோங் – பகாங் மாநிலத்தில் மஇகா போட்டியிடவிருக்கும் ஒரே சட்டமன்றத் தொகுதி என எதிர்பார்க்கப்படும் சபாய் சட்டமன்றத்தில் கடந்த 2013 பொதுத் தேர்தலில் வென்ற காமாட்சி துரைராஜூவே மீண்டும் ஜசெகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 4 சட்டமன்றத் தொகுதிகளில் சபாய் ஒன்றாகும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெந்தோங்கில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், மசீச தேசியத் தலைவருமான லியோவ் தியோங் லாய்யை எதிர்த்து ஜசெகவின் வோங் தாக் மீண்டும் நிறுத்தப்படுகிறார்.

#TamilSchoolmychoice

2008 பொதுத் தேர்தலில் மஇகாவின் சார்பில் சபாய் தொகுதியில் போட்டியிட்ட டத்தோ எம்.தேவேந்திரன் இங்கு 145 வாக்குகள் வித்தியாசத்தில் காமாட்சி துரைராஜூவைத் தோற்கடித்தார்.

ஆனால், 2013 பொதுத் தேர்தலில் இங்கு மீண்டும் போட்டியிட்ட காமாட்சி துரைராஜூ, அந்தத் தேர்தலில் பகாங் மாநில மஇகா தலைவர் டத்தோ ஆர்.குணசேகரனை 117 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2013 புள்ளிவிவரங்களின்படி சபாய் சட்டமன்றம் 36 விழுக்காடு மலாய் வாக்காளர்களையும், 40 விழுக்காடு சீன வாக்காளர்களையும், 20 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் கொண்டிருக்கிறது.

இந்திய வாக்காளர்கள் அதிகமாக இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளில் சபாய் ஒன்றாகும்.