Home நாடு பினாங்கு சட்டமன்றம் திங்கட்கிழமை கலைகின்றது!

பினாங்கு சட்டமன்றம் திங்கட்கிழமை கலைகின்றது!

869
0
SHARE
Ad

ஜார்ஜ் டவுன் – பினாங்கு சட்டமன்றம் இன்று திங்கட்கிழமை கலையவிருக்கின்றது.

இன்று காலை 8.30 மணியளவில், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கின் கார், பினாங்கு சுல்தான் துன் அப்துல் ரஹ்மான் அப்பாசின் இல்லத்திற்குள் நுழைந்தது.

பினாங்கு சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான அனுமதியைப் பெற அப்துல் ரஹ்மானை அவர் சந்திக்கிறார் என ஸ்டார் செய்தி கூறுகின்றது.

#TamilSchoolmychoice

முன்னதாக, மாநிலச் செயலாளர் டத்தோஸ்ரீ ஃபாரிசான் டாருஸ், தனது கார் இல்லத்திற்குள் நுழையும் போது செய்தியாளர்களுக்கு கையசைத்துவிட்டுச் சென்றார்.

இன்று மதியம் 1.45 மணியளவில், கொம்டாரில் லிம் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.

14-வது பொதுத்தேர்தலுக்கு வழிவிடும் வகையில், கடந்த சனிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், 13-வது நாடாளுமன்றத்தைக் கலைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.