Home நாடு குவான் எங் பங்களா ஊழல் விசாரணை: மே 21-க்கு ஒத்தி வைக்கப்பட்டது!

குவான் எங் பங்களா ஊழல் விசாரணை: மே 21-க்கு ஒத்தி வைக்கப்பட்டது!

721
0
SHARE
Ad

ஜார்ஜ் டவுன் – பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் மீதான ஊழல் விசாரணை, வரும் மே 21-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

14-வது பொதுத்தேர்தலுக்குத் தயாராவது முதல்வரின் கடமை என்பதால், இவ்வழக்கை ஒத்தி வைக்குமாறு லிம்மின் வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனை இன்று திங்கட்கிழமை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ ஹதாரியா சையத் இஸ்மாயில், இவ்வழக்கு விசாரணையை மே 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

#TamilSchoolmychoice

இன்று பினாங்கு சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பாக லிம் குவான் எங், மாநில சுல்தானைச் சந்திக்கச் சென்றதால், நீதிமன்றத்தில் லிம் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.