Home நாடு தேர்தல் 14: பெந்தோங்கில் லியாவை எதிர்த்து பாஸ் பாலசுப்ரமணியம் போட்டி!

தேர்தல் 14: பெந்தோங்கில் லியாவை எதிர்த்து பாஸ் பாலசுப்ரமணியம் போட்டி!

996
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், பகாங் மாநிலத்தில் 14 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 40 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக பாஸ் கட்சி நேற்று அறிவித்தது.

அதன் படி, பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியில், பாஸ் ஆதரவாளர்கள் சங்கத் தலைவர் என்.பாலசுப்ரமணியம், அத்தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், போக்குவரத்து அமைச்சருமான மசீசவைச் சேர்ந்த டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாயையும், ஜசெக வேட்பாளர் வோங் தாக்கையும் எதிர்த்துப் போட்டியிடவிருக்கிறார்.

இதற்கான அறிவிப்பை பகாங் மாநில பாஸ் ஆணையர் ரோஸ்லி அப்துல் ஜபார் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

13-வது பொதுத்தேர்தலில், பெந்தோங் தொகுதியில், ஜசெக வேட்பாளர் வோங் தாக்கை எதிர்த்துப் போட்டியிட்ட மசீச டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய், 25,947 வாக்குகள் பெற்று 379 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

எனவே, மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலிலும் பெந்தோங் தொகுதியிலேயே லியாவ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.