Home தேர்தல்-14 தேர்தல்-14: “நஜிப் ஆட்சியை விட்டுக் கொடுக்க மாட்டார் என அஞ்சுகிறேன்” – மகாதீர்

தேர்தல்-14: “நஜிப் ஆட்சியை விட்டுக் கொடுக்க மாட்டார் என அஞ்சுகிறேன்” – மகாதீர்

1017
0
SHARE
Ad
துன் மகாதீர் – மலேசியாகினி நேர்காணலின்போது…(படம்: நன்றி – மலேசியாகினி)

கோலாலம்பூர் – மலேசியாகினி ஊடகத்திற்கு வழங்கியுள்ள நேர்காணலில் “மே 9 பொதுத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணி வென்றாலும், ஆட்சி அதிகாரத்தை சுமுகமாக நஜிப் விட்டுக் கொடுக்கமாட்டார்” எனத் தான் அஞ்சுவதாக துன் மகாதீர் கூறியுள்ளார்.

நாட்டில் அம்னோவால் கலவரங்கள் நிகழும் என வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் மகாதீர் மேலும் தனது நேர்காணலில் கூறியுள்ளார்.

அவசர கால சட்டம் பிறப்பிப்பது, தேசியப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வருவது, நாடாளுமன்ற ஜனநாயகத்தை முடக்குவது போன்ற செயல்களில் நஜிப் ஈடுபடக் கூடும் என்றும் மகாதீர் அச்சம் தெரிவித்துள்ளார். புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் யாரையும் கைது செய்யவும், காவலில் வைக்கவும் பிரதமருக்கு அதிகாரம் உண்டு என்பதையும் சுட்டிக் காட்டிய மகாதீர், எனினும், காவல் துறையினர் மற்றும் ஆயுதப் படையினர் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே நஜிப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும் என்றார் மகாதீர்.

#TamilSchoolmychoice

“பிலிப்பைன்சில் இதுதான் நடந்தது. மார்க்கோசுக்கு இராணுவமும், காவல் துறையும் அக்கினோ கொலை காரணமாக ஆதரவு வழங்கவில்லை. நமது நாட்டிலும் நஜிப் சட்டத்தை மீற முற்பட்டால் காவல் துறை மற்றும் இராணுவத்தின் தலைமை அதிகாரிகள் ஆதரவு தரமாட்டார்கள் என நம்புகிறேன்” என்றும் மகாதீர் மலேசியாகினி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.