Home உலகம் “எங்களது தபால் வாக்குகள் எங்கே?” – லண்டனில் மலேசியர்கள் போராட்டம்!

“எங்களது தபால் வாக்குகள் எங்கே?” – லண்டனில் மலேசியர்கள் போராட்டம்!

1451
0
SHARE
Ad

லண்டன் – 14-வது பொதுத்தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் தங்களுக்கு மிகவும் தாமதமாக வந்ததாகக் கூறி லண்டனில் நேற்று திங்கட்கிழமை சுமார் 30 வெளிநாட்டு வாழ் மலேசியர்கள் மலேசியத் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

பெர்சே யூகே அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டம், டிராபால்கார் ஸ்கொயர் அருகே உள்ள மலேசிய சுற்றுலா விளம்பர வாரியத்தின் அலுவலகம் அருகே நடைபெற்றது.

எனினும், சுற்றுலா வாரியம் நேற்று விடுமுறை காரணமாக மூடியிருந்தது.

#TamilSchoolmychoice

அப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள், “தேர்தல் ஆணையமே? எங்கே எனது தபால் வாக்குகள்?”, “எங்களுக்கு நியாயமான, சுதந்திரமான தேர்தல் வேண்டும்” என வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.

நேற்று வெளிநாட்டு வாழ் மலேசியர் ஒருவர் பேஸ்புக்கில் வெளியிட்டிருந்த தகவலில், தனக்கு மே 7-ம் தேதி தான் தபால் வாக்குச்சீட்டு வந்தடைந்ததாகவும், மே 9-ம் தேதி பொதுத்தேர்தலுக்குள் எப்படி அதனை அனுப்பி வைக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

தனது வாக்கை மலேசியத் தேர்தல் ஆணையம் வீணடித்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.