இலண்டன் : தமிழ்த் திரையுலகில் பல சாதனைகளைப் புரிந்த இளையராஜா, நேற்று சனிக்கிழமை (மார்ச் 8) தனது இசைப் பயணத்தில் இன்னொரு மைல் கல்லாக, இலண்டனில் ‘சிம்பொனி’ இசைக் கோர்வையை அரங்கேற்றினார்.
இந்திய நாடாளுமன்ற மேலவையின் (ராஜ்ய சபா) உறுப்பினராகவும் இருக்கும் இளையராஜாவின் இந்த நிகழ்ச்சியில் அவரின் மகன்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடந்த சில நாட்களாக பல பிரமுகர்கள் இளையராஜாவை நேரில் சந்தித்துத் தங்களின் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல பிரமுகர்கள் தங்களின் வாழ்த்துகளை இளையராஜாவை நேரில் சந்தித்துத் தெரிவித்தனர்.
ரஜினிகாந்த் காணொலி வழி தனது வாழ்த்துகளைத் தெரிவித்து இளையராஜா இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இலண்டனின் புகழ்பெற்ற பில்ஹார்மோனிக் இசைக் குழுவினர் துணையோடு இளையராஜா தன் சிம்பொனி இசைக் கோர்வையை அரங்கேற்றி தமிழர்களுக்கும் தமிழ் இசைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.