புத்ராஜெயா – 1எம்டிபி ஊழல் விசாரணை தொடர்பாக, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் முன்னாள் சிறப்பு அதிகாரி நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
நேற்று காலை 9.45 மணியளவில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத் தலைமையகத்திற்கு அவர் வாக்குமூலம் அளிக்க வந்த போது, அவர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, இன்று திங்கட்கிழமை காலை 42 வயதான அந்த ‘டத்தோ’ அந்தஸ்து கொண்ட அதிகாரி, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அவரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிபதி ஷா வீரா ஹாரிம் உத்தரவிட்டதையடுத்து, அவர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.