Home கலை உலகம் காதலருக்காக 100 கோடியில் பங்களா வாங்கினார் பிரியங்கா சோப்ரா!

காதலருக்காக 100 கோடியில் பங்களா வாங்கினார் பிரியங்கா சோப்ரா!

1310
0
SHARE
Ad

புதுடெல்லி – பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் தொடர்களில் நடித்து அமெரிக்க ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். தற்போது அவர் நடித்து வரும் குவாண்டிகோ என்ற தொடர் நல்ல வரவேற்பினைப் பெற்று வருவதால், அமெரிக்காவிலேயே தங்கிவிட்டார்.

இந்நிலையில், பிரபல அமெரிக்கப் பாடகரான நிக் ஜோனாசுடன் பிரியங்கா சோப்ரா காதல் வயப்பட்டிருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அதற்கு முதலில் எந்த ஒரு பதிலும் கூறாமல் இருந்து வந்த பிரியங்கா, தற்போது காதலரை மும்பைக்கு அழைத்து வந்து வெளிப்படையாகவே அவருடன் ஊர் சுற்றத் தொடங்கியிருக்கிறார்.

மேலும், மும்பையில் 100 கோடியில் கடற்கரை சொகுசு பங்களா ஒன்றை வாங்கியிருக்கும் பிரியங்கா சோப்ரா, அதில் தனது காதலருடன் வாழ்ந்து வருவதாக மும்பை சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. விரைவில் பிரியங்காவிடமிருந்து திருமண அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.