Home கலை உலகம் 2018 ஆஸ்கார் பரிந்துரைப் பட்டியலை அறிவிக்கிறார் பிரியங்கா!

2018 ஆஸ்கார் பரிந்துரைப் பட்டியலை அறிவிக்கிறார் பிரியங்கா!

1154
0
SHARE
Ad

Priyanka Chopraபுதுடெல்லி – கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்கார் விருது விழாவில் தனது வித்தியாசமான உடைகளால் கவர்ந்து வந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, 2018-ம் ஆண்டு ஆஸ்காரில், சிவப்புக் கம்பள வரவேற்பையும் தாண்டி, முக்கியப் பொறுப்பேற்றிருக்கிறார்.

இந்த ஆண்டு ஆஸ்காருக்குப் பரிதுரைக்கப்பட்டிருக்கும் படங்களின் பட்டியலை அறிவிக்கப்போவது நம்ம பிரியங்கா தான்.

இதற்கான முதற்கட்ட அறிவிப்பை ஆஸ்கார் குழு, இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

பிரியங்காவைத் தவிர, ரோசாரியோ டாசன், ரெபெல் வில்சன், மலேசிய நடிகை மைச்சேல் இயோ, மிச்சேல் ரோட்ரிகோஸ் ஆகியோரும் ஆஸ்கார் பரிந்துரைப்பட்டியலை அறிமுகம் செய்கின்றனர்.