கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு ஜெயித்து, ஒரு எளிய பெரும்பான்மையில் அரசாங்கம் அமைக்கும் பாஸ் கட்சியின் கனவு முட்டாள்தனமானது என பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.
“அது ஒரு முட்டாள்தனமான கனவு” என இன்று செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மகாதீர் குறிப்பிட்டிருக்கிறார்.
“பாஸ், தனி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் அல்லது அரசாங்கத்தை அமைப்பதில் பங்களிப்பு செய்ய வேண்டும். ஒரு பலவீனமான எதிர்கட்சியாக இனி இருக்காது” என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.