Home கலை உலகம் ‘சுராங்கனி’ புகழ் பாடகர் சிலோன் மனோகர் காலமானார்!

‘சுராங்கனி’ புகழ் பாடகர் சிலோன் மனோகர் காலமானார்!

923
0
SHARE
Ad

Cylone Manoharசென்னை – இலங்கையின் பிரபல பாப் இசைப் பாடகரும், நடிகருமான சிலோன் மனோகர் (வயது 73) நேற்று திங்கட்கிழமை இரவு காலமானார்.

‘சுராங்கனி’ என்ற பாடல் மூலம் இந்தியா, இலங்கை என உலகின் பல நாடுகளில் பிரபலமடைந்த சிலோன் மனோகர், அதன் பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.

மேலும், அஞ்சலி, திருமதி செல்வம், அத்திப்பூக்கள் உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.