Home இந்தியா விமானத்தில் இருந்து விழுந்த மனிதக்கழிவுகள்: ‘அதிருஷ்டக் கல்’ என எண்ணிய மக்கள்!

விமானத்தில் இருந்து விழுந்த மனிதக்கழிவுகள்: ‘அதிருஷ்டக் கல்’ என எண்ணிய மக்கள்!

1496
0
SHARE
Ad

meteor-poopகுர்கான் – இந்தியாவின் வடக்குப் பகுதியான ஹரியானாவில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த வாரம் சனிக்கிழமை, வானில் இருந்து உறைந்த நிலையில், 10 முதல் 12 கிலோ எடையுள்ள ஒரு பந்து நிலத்தில் விழுந்தது.

பனிக்கட்டி போல் உறைந்த நிலையில் காணப்பட்ட அக்கல்லின் சில பாகங்கள் ‘அதிருஷ்டக் கல்’ என நம்பிய கிராமவாசிகள் சிலர் வீட்டிற்கு எடுத்துச் சென்று குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், அதனை ஆய்வு செய்த அதிகாரிகள், வானில் இருந்து விழுந்த அக்கல், நிச்சயமாக வளிமண்டல நிகழ்வால் தோன்றியது அல்ல என்றும், அது விமானத்தின் கழிவறையில் இருந்து உறைந்த நிலையில் விழுந்த மனிதக்கழிவுகளாக இருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

விமானத்தில் மனிதக்கழிவுகளின் துர்நாற்றத்தைப் போக்கவும், அதனை சிதைக்கவும் சில இரசாயனங்கள் பயன்படுத்தப்படும் என்றும், அம்முறைக்கு ‘ப்ளூ ஐஸ்’ என்றும் பிபிசி கூறுகின்றது.

விமானங்களில் அதிகளவு கழிவுகள் சேரும் போது இது போல் வானில் இருந்து விழும் வாய்ப்பு இருப்பதாகவும் பிபிசி கூறுகின்றது.

இதனிடையே, அக்கிராமம் அமைந்திருக்கும் பகுதியில் வானில் அடிக்கடி விமானப் போக்குவரத்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.