Home One Line P2 மகாராஷ்டிரா, ஹரியானாவில் பாஜக முன்னிலை!

மகாராஷ்டிரா, ஹரியானாவில் பாஜக முன்னிலை!

751
0
SHARE
Ad

மகாராஷ்டிரா (இந்திய நேரம் காலை 9:10 மணி): ஆளும் பாஜக கட்சி இரண்டாவது முறையாக மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலத்தைக் கோரும் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை முடிவுகள் இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கியது.

இரு மாநிலங்களுடன் சேர்ந்து, 17 மாநிலங்களில் 51 இடங்களில் சட்டசபை இடைத்தேர்தலுக்கான முடிவுகளும் அறிவிக்கப்படும்.

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜகவும் அதன் நட்பு கூட்டணியுமான சிவசேனாவும் 288 சட்டமன்ற இடங்களில் 167 இடங்களில் முன்னிலையில் உள்ளன. காங்கிரசும் அதன் நட்பு கூட்டணியான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் (என்சிபி) 89 இடங்களில் முன்னணியில் உள்ளன.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில் ஆளும் கட்சியும் ஹரியானாவில் தீர்க்கமாக முன்னிலையில் உள்ளது. 90 இடங்களில் 41 இடங்களில் பாஜகவும், 30 இடங்களில் காங்கிரஸும் முன்னணியில் உள்ளன.

(மேலும் விவரங்கள் தொடரும்)