![](https://selliyal.com/wp-content/uploads/2025/02/Narendra-Modi-08022025.jpg)
புதுடில்லி: கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. டெல்லி சட்டமன்றத்திற்கான மொத்த தொகுதிகள் 70 என்ற நிலையில் ஆட்சி அமைக்கத் தேவையான 36 தொகுதிகளை விட 12 தொகுதிகள் கூடுதலாக பாஜக பெற்றுள்ளது.
காங்கிரஸ் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
இதைத் தொடர்ந்து பாஜக பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி 27 ஆண்டுகளுக்குப் பின்னர் டில்லியில் மீண்டும் ஆட்சியமைக்கிறது.
ஆம் ஆத்மி கட்சியைக் கட்டமைத்த அரவிந்த் கெஜ்ரிவால் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அதைத் தொடர்ந்து அவர் பதவி விலகியது, அவருக்குப் பதிலாக அதிஷி மார்லினா முதலமைச்சராகப் பதவியேற்றது – போன்ற அம்சங்கள் அந்தக் கட்சியின் வெற்றிக்குப் பின்னடைவைக் கொண்டு வந்ததாகக் கருதப்படுகிறது.