Home இந்தியா டில்லி சட்டமன்றத் தேர்தல்: 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமா?

டில்லி சட்டமன்றத் தேர்தல்: 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமா?

59
0
SHARE
Ad
அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடில்லி: கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை சனிக்கிழமை (பிப்ரவரி 8) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளின்படி பாஜக மீண்டும் டில்லியைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம் ஆத்மி கட்சியைக் கட்டமைத்த அரவிந்த் கெஜ்ரிவால் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அதைத் தொடர்ந்து அவர் பதவி விலகியது, அவருக்குப் பதிலாக அதிஷி மார்லினா முதலமைச்சராகப் பதவியேற்றது – போன்ற அம்சங்கள் அந்தக் கட்சியின் வெற்றிக்குப் பின்னடைவைக் கொண்டு வரலாம்.

#TamilSchoolmychoice

எனினும் கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட ஊடகக் கருத்துக் கணிப்புகள் பொய்யாக்கப்பட்டு, நேர் எதிர்மாறான முடிவுகளைக் கொண்டு வந்தன.

கருத்துக் கணிப்புகள் உண்மையானால், 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக டில்லியைக் கைப்பற்றி மீண்டும் அங்கு ஆட்சியமைக்கும். பாஜக தலைமையிலான கூட்டணி 51 தொகுதிகளில் வெல்லும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆட்சி அமைக்க 36 தொகுதிகளே தேவை.