Home இந்தியா டெல்லியின் புதிய முதல்வர் அதிஷி மார்லினா!

டெல்லியின் புதிய முதல்வர் அதிஷி மார்லினா!

340
0
SHARE
Ad
அதிஷி மார்லினா

புதுடில்லி : டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து புதிய முதல்வராக டாக்டர் அதிஷி மார்லினா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை காரணமாக ஊழல் வழக்குகளை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் எதிர்நோக்கினர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை வழக்கில் சிறை சென்றார். 6 மாத சிறைவாசத்திற்குப் பின்னர் சிறையிலிருந்து வெளிவந்த அவர் மீது உச்சநீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளை விதித்தது.

இதைத் தொடர்ந்து அவர் தனது முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்குப் பதிலாக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி மார்லினா புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

தேர்தலில் வென்று மீண்டும் மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சியில் அமர விரும்புவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தனது அதிகாரத்துவ இல்லத்திலிருந்தும் விரைவில் வெளியேறப் போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.