Home கலை உலகம் உறவு குறித்து மனம் திறந்த பிரியங்கா சோப்ரா!

உறவு குறித்து மனம் திறந்த பிரியங்கா சோப்ரா!

964
0
SHARE
Ad

Priyanka Chopraபுதுடெல்லி – பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை புகழ் பெற்ற நடிகையான பிரியங்கா சோப்ரா, அண்மையில் ஆஸ்கார் விருதை அறிவிக்கும் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றார்.

தனது காதல் குறித்தோ, திருமணம் குறித்தோ வாய்திறக்காமல் எப்போது மௌனம் காத்து வந்தார்.

இந்நிலையில் 2018 பிலிம்பேர் விருதுவிழாவில் மனம் திறந்த பிரியங்கா, “நான் தீவிரமான உறவைப் பின்பற்றுபவள். இப்போது தனியாக தான் இருக்கிறேன். ஆனால் ஒருவருடத்திற்கு முன்பு வரை நிறைய மனிதர்களைச் சந்தித்தேன். அவர்களுடன் வெளியே சென்றேன். யாராவது என்னை கவர்வார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் யாரும் இல்லை. இன்னும் என் மனம் வெடிக்கவில்லை. இன்னும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், “நானும் நீண்ட காலமாக தனியாகத் தான் இருந்து வருகின்றேன். எல்லோரது கவனத்தையும் ஈர்க்கிறேன். ஆனால் அதை வைத்து என்ன செய்வது? அதை நான் ரசிக்கிறேன் தான் என்றாலும் நானும் ஒரு பெண். எனக்கும் உணர்வுகள் உண்டு” என்றும் பிரியங்கா தெரிவித்திருக்கிறார்.