ஷா ஆலம் – என்எஃப்சி (National Feedlot Corporation) ஊழல் தொடர்பான இரகசிய வங்கி ஆவணங்களை வெளியிட்ட குற்றத்திற்காக பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிசி ரம்லிக்கு அமர்வு நீதிமன்றம் இன்று புதன்கிழமை 30 மாத சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
மேலும், இவ்வழக்கில் ரஃபிசியுடன் சேர்க்கப்பட்ட முன்னாள் வங்கிக் கணக்காளர் ஜோஹாரி முகமதுவிற்கும் 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜம்ரி பக்கார், இவ்வழக்கில் எதிர்தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த பின், இருவரின் மீது குற்றம் இருப்பது உறுதியாகிவிட்டதாகக் கூறி இத்தீர்ப்பை வழங்கினார்.
எனினும், தண்டனையை நிறுத்தி வைத்து மேல்முறையீடு செய்யவும், இருவரும் தலா 15,000 ரிங்கிட் கட்டி பிணையில் செல்லவும் நீதிபதி அனுமதியளித்தார்.