Home இந்தியா பிரதமர் மோடியின் மனைவி கார் விபத்தில் காயம்!

பிரதமர் மோடியின் மனைவி கார் விபத்தில் காயம்!

897
0
SHARE
Ad

Modi wifeபுதுடெல்லி – பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென், இன்னோவா காரில் ராஜஸ்தானில் இருந்து குஜராத் திரும்பிக் கொண்டிருந்த போது, அவரது கார் சித்தோர்கா என்ற இடம் அருகே விபத்திற்குள்ளானது.

இதில் ஜசோதாபென்னுக்கும், அவரது உறவினருக்கும் காயம் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்.

ஜசோதாபென்னுக்கு லேசான காயம் தான் என்றும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் சித்தோர்கா காவல்துறை தெரிவித்திருக்கிறது.