Home இந்தியா தமிழ் இருக்கைக்கு திமுக 1 கோடி: அமைச்சர் மாபா பாண்டியராஜன் வரவேற்பு!

தமிழ் இருக்கைக்கு திமுக 1 கோடி: அமைச்சர் மாபா பாண்டியராஜன் வரவேற்பு!

1029
0
SHARE
Ad

Harvard-University-1024x768சென்னை – தமிழ் இருக்கைக்கு திமுக 1 கோடி வழங்குவதாக நேற்று செவ்வாய்க்கிழமை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காகவும் முதன்மைக்காகவும் போராடும் கருணாநிதி சார்பில் இந்த நிதி வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின்,

தமிழுக்கு கிடைக்கப் போகும் ஹார்வார்டு இருக்கை என்பது ஒவ்வொரு தமிழனின் பெருமையாகும். உயர்நீதிமன்றம், மத்திய அரசு அலுவலகங்களில் ஒரு நாள் தமிழ் நிச்சயம் அரியணை ஏறியே தீரும். விரைவில் தமிழ் இருக்கை அமைந்து தேமதுர தமிழோசை உலகமெங்கும் பரவ வழி வகை செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், திமுக-வின் இந்த அறிவிப்பிற்கு அமைச்சர் மாபா பாண்டியராஜன் வரவேற்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இந்த நிதியை திமுக மிக விரைவில் வழங்க வேண்டும் என்றும், தமிழ் இருக்கை அமைய தேவையான தொகையில் எஞ்சியுள்ள ஒரு கோடி ரூபாய் நிதி இம்மாத இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றும் மாபா பாண்டியன் குறிப்பிட்டார்.