Home நாடு ஹுசாம் மூசா உள்ளிட்ட இருவரது டத்தோ பட்டம் பறிப்பு!

ஹுசாம் மூசா உள்ளிட்ட இருவரது டத்தோ பட்டம் பறிப்பு!

962
0
SHARE
Ad

husam-musa5-nov3_400_267_100கோலாலம்பூர் – சாலோர் சட்டமன்ற உறுப்பினர் ஹூசாம் மூசா மற்றும் முன்னாள் கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் வான் அப்துல் ரஹிம் வான் அப்துல்லா ஆகியோரது டத்தோ பட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அகற்றப்படுவதாக கிளந்தான் அரண்மனை தெரிவித்திருக்கிறது.

இதனையடுத்து இன்று புதன்கிழமை ஹூசாம் மூசாவும், வான் அப்துல் ரஹீமும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

தங்களுக்கு வழங்கப்பட்ட மாநில அரச மரியாதையைத் திரும்பப் பெற, பேரரசரும், கிளந்தான் சுல்தானுமாகிய மேன்தங்கிய சுல்தான் முகமது V, உத்தரவிட்டதாக கிளந்தான் மாநிலச் செயலாளரிடமிருந்து தங்களுக்குக் கடிதம் வந்தஹ்தாக அவர்கள் இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

“இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, சுல்தானுடைய மாட்சிமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதோடு, எமது பிளவில்லாத விசுவாசத்தையும் மீண்டும் வலியுறுத்திக் கொள்கின்றோம்” என ஹூசாம் மூசாவும், வான் அப்துல் ரஹீமும் தெரிவித்தனர்.