கோத்தா பாரு: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் இக்காலக்கட்டத்தில் தேவைப்படும் மக்களுக்கு உதவும் வகையில் ஏப்ரல் முதல் ஆறு மாதங்களுக்கு அரச ஊதியத்தை கிளந்தான் சுல்தான் கைவிடுவதாக கிளந்தான் அரண்மனை தெரிவித்துள்ளது.
ஆறு மாதங்களின் ஊதியத்தை கிளந்தான் மாநில அரசு அலுவலகம் நல்ல முறையில் நிர்வகிக்கும் என்றும், இந்த உத்தரவை நிறைவேற்றுவதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் சுமைகளை குறைக்க உதவும் என்றும் சுல்தான் நம்புவதாக அரண்மனை மேலாளர் டத்தோ நிக் முகட் ஷாப்ரிமான் நிக் ஹாசன் கூறினார்.
எளிதில் பாதிப்புக்குள்ளாகுபவர்களைப் பாதுகாப்பதன் மூலம், அதிகமான குடும்பங்கள் அன்புக்குரியவர்களை இழப்பதைத் தடுக்க முடியும் என்று சுல்தான் கருதுவதாக அவர் கூறினார்.
மேலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்பட்டு நடப்பதன் மூலம் முன்னணிப் பணியாளர்களுக்கு உதவ அனைத்து மக்களும் ஒன்றிணைந்து பணியாற்றுமாறு சுல்தான் முகமட் நினைவூட்டியதாக நிக் முகமட் கூறினார்.