Home One Line P1 கொவிட்-19: சிலாங்கூர் மென்ஷன்- மலாயன் மென்ஷன் முழு தடைக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டன!

கொவிட்-19: சிலாங்கூர் மென்ஷன்- மலாயன் மென்ஷன் முழு தடைக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டன!

942
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: சிலாங்கூர் மென்ஷன் மற்றும் மலாயன் மென்ஷன் பகுதிகளில் 15 கொவிட் -19 தொற்று நோய்க்கான நேர்மறை சம்பவங்கள் கண்டறியப்பட்ட பின்னர், அப்பகுதிகளில் முழுமையான கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

சம்பவங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு, சுகாதார அமைச்சரின் ஆலோசனையின் பேரில், முழுமையான நடமாட்டக் கட்டுப்பாடு இப்பகுதியில் விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

365 குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் உள்ள இப்பகுதியில் சுமார் 5,000 முதல் 6,000 குடியிருப்பாளர்களை இந்த கட்டுப்பாடு உள்ளடக்கி உள்ளது.

#TamilSchoolmychoice

இந்த உத்தரவு ஏப்ரல் 7 முதல் கண்காணிப்பு முடியும் வரை நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.