Home வணிகம்/தொழில் நுட்பம் பினாங்கிற்கு புதிய சேவையைத் துவங்கியது கத்தார் ஏர்வேஸ்!

பினாங்கிற்கு புதிய சேவையைத் துவங்கியது கத்தார் ஏர்வேஸ்!

1058
0
SHARE
Ad

qatar_imgஜார்ஜ் டவுன் – தோகாவில் இருந்து பினாங்கிற்கு இடைவிடாத சேவையைத் தொடரவிருக்கும் கத்தார் ஏர்வேசின் முதல் விமானம் நேற்று செவ்வாய்க்கிழமை பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது.

பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் தற்போது உள்ளூர், ஆசியான் மற்றும் சீனாவின் இரண்டாம் நிலை நகரங்களுக்கு விமானங்கள் பயணச் சேவையை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கத்தார் ஏர்வேசின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் QR850, ஹமாட் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்டு 8 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு பினாங்கை மதியம் 2.30 மணியளவில் அடைந்தது.

#TamilSchoolmychoice

அவ்விமானத்தில் கத்தாருக்கான மலேசியத் தூதர் அஹமத் ஃபாடில் ஷம்சுடின் உட்பட கத்தார் ஏர்வேஸ் தலைமை வர்த்தக அதிகாரி ஏஹாப் அமின் தலைமையிலான பேராளர்கள் குழு பினாங்கை வந்தடைந்தது.

அவர்களை மலேசியாவுக்கான கத்தார் தூதர் எசா பின் முகமது அல் மன்னை, பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங் பெர்ஹாட் நிர்வாக இயக்குநர் பட்லிஷாம் கசாலி, பினாங்கு அனைத்துலக சுற்றுலாத்துறைத் தலைமை செயல் அதிகாரி ஊய் சோக் யான் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், பினாங்கிற்கு கத்தார் ஏர்வேசின் விமான வாரத்தில் மூன்று முறைப் பயணச்சேவை ஆற்றும் என்றும், 22 வர்த்தக வகுப்புகளும், 232 மலிவு விலை வகுப்புகளும் இவ்விமானத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வரும் ஜூலை 1-ம் தேதி முதல் வாரத்தில் நான்கு நாட்களுக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் பயணச்சேவையாற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.