Home One Line P1 சுல்தான் முகமட் 2 மில்லியன் மருத்துவ கையுறைகளை வழங்கினார்!

சுல்தான் முகமட் 2 மில்லியன் மருத்துவ கையுறைகளை வழங்கினார்!

628
0
SHARE
Ad

கோத்தா பாரு: கொவிட்-19- க்கு எதிரான போரில் முன்னணி தொழிலாளர்கள் பயன்படுத்த கிளந்தான் மாநில சுல்தான், சுல்தான் முகமட் இரண்டு மில்லியன் ரப்பர் மருத்துவ கையுறைகளை தமது தனிப்பட்ட பங்களிப்பாக சுகாதார அமைச்சகத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

இந்த பங்களிப்பை பிரதமர் துறை அமைச்சர் டத்தோ தக்கியுடின் ஹசான், சுல்தான் முகமட்டை பிரதிநிதித்துவப்படுத்தி சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபாவிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கலந்து கொண்டார்.