Home நாடு அன்வார் கிளந்தான் வெள்ள நிலைமையைப் பார்வையிட்டார்

அன்வார் கிளந்தான் வெள்ள நிலைமையைப் பார்வையிட்டார்

368
0
SHARE
Ad

கோத்தா பாரு : கிளந்தான் மாநிலத்தில் மோசமடைந்துள்ள வெள்ள நிலைமையைப் பார்வையிடுவதற்காக இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோத்தா பாரு வந்தடைந்தார்.

அவருடன் கிளந்தான் மந்திரி பெசார் டத்தோ முகமட் நசாருதின் டாவுட், இயற்கை வளம் சுற்றுச் சூழல் அமைச்சர் நிக் நாஸ்மி நிக் அகமட், நட்மா என்னும் தேசியப் பேரிடர் அமைப்பின் அதிகாரிகளும் வெள்ள நிலைமையைப் பார்வையிட்டு, விளக்கமளித்தனர்.

மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளையும் அன்வார் பார்வையிட்டார். மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கான நிவாரணப் பணிகளை வழங்கி வருவதாகவும் அன்வார் குறிப்பிட்டார்