Home உலகம் சத்யா நாடெல்லா, அனைத்துலக அளவில் சிறந்த தலைமைச் செயல் அதிகாரியாக, சிஎன்என் ஊடகத்தால் தேர்வு

சத்யா நாடெல்லா, அனைத்துலக அளவில் சிறந்த தலைமைச் செயல் அதிகாரியாக, சிஎன்என் ஊடகத்தால் தேர்வு

581
0
SHARE
Ad
சத்யா நாதெல்லா

வாஷிங்டன் : மைக்ரோசோப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா அனைத்துலக அளவில் சிறந்த தலைமைச் செயல் அதிகாரி என அமெரிக்காவின் சிஎன்என் ஊடகத்தால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, சாட் ஜிபிடி (ChatGPT) போன்ற செயலிகளின்வழி செயல்படுத்தியதற்காக அவருக்கு இந்த சிறப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

மற்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் முதலீடு செய்ய முன்வராத நிலையில் பல பில்லியன் அமெரிக்க டாலர்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்தார் சத்யா.

#TamilSchoolmychoice

இந்த ஆண்டு மைக்ரோசோப்ட் நிறுவனத்தின் பங்குகளின் விலைகளும் பங்குச் சந்தையில் 55 விழுக்காடு விலையுயர்வு கண்டன.

இந்தியாவில் பிறந்து வளர்ந்தவரான சத்யா, 1980-ஆம் ஆண்டுகளில் முதுகலைப் பட்டப் படிப்புக்காக அமெரிக்கா வந்தார். முதலில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் பின்னர் சிக்காகோ பல்கலைக் கழகத்தில் வணிக நிருவாகத் துறையில் எம்பிஏ என்னும் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.

மைக்ரோசோப்ட் நிறுவனத்தில் ஒரு பொறியியலாளராக (என்ஜினியர்) இணைந்தார். கடுமையான உழைப்பின் காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

13 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை மைக்ரோசோப்ட் திறந்தவெளி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையில் செய்தது. இதற்கு பின்னணியில் காரணமாக இருந்தவர் சத்யா நாதெல்லாதான்.