Home கலை உலகம் ரஜினிகாந்த் நாகர்கோவில் படப்பிடிப்பிலிருந்து விஜய்காந்துக்கு இறுதி மரியாதை செலுத்த சென்னை திரும்புகிறார்

ரஜினிகாந்த் நாகர்கோவில் படப்பிடிப்பிலிருந்து விஜய்காந்துக்கு இறுதி மரியாதை செலுத்த சென்னை திரும்புகிறார்

446
0
SHARE
Ad

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்னர் தான் நடிக்கும் வேட்டையன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள நாகர் கோவில் வந்தடைந்தார். தென் மாவட்டங்களில் வெள்ள நிலைமை மோசமாகியிருக்கும் நிலையில் அதனைப் பொருட்படுத்தாது படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்திருக்கும் ரஜினியின் செய்கை குறித்து சமூக ஊடகங்களிலும் விமர்சிக்கப்பட்டது.

இன்று நடிகர் விஜயகாந்த் மறைவை முன்னிட்டு திரைப்படப் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

வேட்டையன் படப்பிடிப்பை இரத்து செய்து விட்டு நடிகர் ரஜினிகாந்தும் நாகர் கோவிலில் இருந்து விமானம் மூலம் சென்னைக்குத் திரும்புகிறார். இன்று அல்லது நாளை (டிசம்பர் 29) அவர் விஜயகாந்துக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஜெய் பீம் படத்தை இயக்கிய, த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இதில்  பகத் பாசிலும் நடித்து வருகிறார். அமிதாப் பச்சனும் இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைகிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் ரஜினிகாந்தின் 170-வது படம் ‘வேட்டையன்’ ஆகும்.