எனினும் அங்கு இட நெரிசல் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. பொதுமக்கள் இடைஞ்சலின்றி விஜயகாந்துக்கு இறுதி மரியாதை செலுத்த வசதியாக பொது இடம் ஒன்றை அடையாளம் காட்டும்படி முதலமைச்சர் ஸ்டாலினை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், நாளை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை சென்னை தீவுத் திடலில் விஜயகாந்தின் நல்லுடல் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை 4.45 மணியளவில் சென்னை கோயம்பேடுவில் தேமுதிக தலைமையக அலுவலகம் அமைந்திருக்கும் வளாகத்திலேயே விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
71 வயதான விஜய்காந்த் கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தார்.பின்னர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கி அரசியலிலும் ஈடுபட்டார்.
விஜயகாந்தின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையோடு நடைபெறும் எனவும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்கிடையில், விஜயகாந்திற்கு மரியாதை தெரிவிக்கும் பொருட்டு திரையரங்குகளில் இன்றைய காலைக் காட்சிகள் இரத்து செய்யப்பட்டன.
திரைப்படப் படப்பிடிப்புகளும் இரத்து செய்யப்பட்டன.